நானாகும் முன் நான் யாரோ!
நான் என்றொன்றுண்டோ?
பாரென்பதினுள்ளில்
நானென்பது வேறோ?
உடல் மனம் ஒட்டி உருமாறும் விளைவை
நானென்பது சரியோ?
நிலையானது மதி அறியாதிடவே
உளதென்பது பிழையோ?
வாழ்வின் நுழைவாய் கடந்த விந்து
முதல் கொண்டது இன்பம் தானோ?
பேரின்பச் சுழலில் சறுக்கி வந்து
கருவாவது போராட்டம் தானோ?
நானாகிய ஜன்மம் ஜனித்து
ஜபித்த முதல்வரி யேதோ?
இந்த சிந்தனையாவதும் இல்லாவிட்டால்
வாழ்வின் சுவை அரிதோ!
என் எண்ணங்கள்த் துடர்ந்து முளைத்திட
விதையை புதைத்தது யாரோ?
அறிந்தவர் சொல்லிய ரகசியம் போல
ஆசை அவன் சிறு பெயரோ?
விழித்திருக்கும் பொருளின் திருவொளி
தூக்கத்தில்ப் பரவாததுயேனோ?
விழித்தறிகிறதெல்லாம் கூட
சிந்தனை சித்திரம்தானோ?
தொடரும்...
நான் என்றொன்றுண்டோ?
பாரென்பதினுள்ளில்
நானென்பது வேறோ?
No comments:
Post a Comment