Friday 5 August 2016

பிரயாணம்

நிர்வாணமாக ஒருவன் உணவுக்கு ஏங்கி பாலைவனத்தில் அலைகிறான். கண்ணெட்டிய தூரமெங்கும் மண் கடல். வெயில் கூசி அவன் கண்கள் முக்காலும் அடைந்துபோயிற்று. அவன் உடம்பெல்லாம் மண் ஒட்டி இருந்தது. தோற்றதில் அவன் அகோரி. அவன் எண்ண்த்திலும் அகொரத்த்னம் எண்ணற்ற முறை மின்னியுள்ளது. தனதொருகையை சாப்பிட்டுவிட்டாலென்ன? பயமிருந்தால் சிந்தனைக்கும் செயலுக்கும் பார்க்கடல் தூரம் உண்டு. அவன் கை ஒவ்வொரு முறையும் தப்பிக்கொண்டது. அகந்தைக்கு இருக்கும் பயம் உயிருக்குக் கிடையாது. அது ஒட்டியிருக்கும் உயிரை கரைத்து ஊட்டிக் கொண்டேஇருந்தது. அவனிடம் மிஞ்சியிருப்பது எலும்பும் தோலும் தான். கண்ணீர் கசியவில்லை அவன் அழுகை. சிருநீர்க்குழாயிலோ இரத்தம் சொட்ட ஆரம்பித்துவிட்டது.

இச்சோதனையின் ஆரம்பம் எங்கு? எப்படி அவன் அங்கு அகப்பட்டான் என்று அவன் நினைவுக்கு எட்டவில்லை. தன் கதையை இப்பரிதாபத்திலிருந்து முடித்துக்கொள்ள பல்முறை முயன்றிருக்கிறான். அச்செயலை ஒருமுறையும் இருதிமூச்சுக்கு எடுத்துச்செல்ல அவனால் இயலவில்லை. அதற்கும் பயத்தை விரல்சூண்ட முடியாது, அது வெறும் இயலாமையே.

சுற்றிலும் வேறுயுரின் அறிகுறி ஏதுமில்லை. சூரியன் எப்பொழுதும் உச்சிமேல் உசந்திருந்தது. அது எப்பக்கமும் சாய்ந்த நினைவு அவனுக்கு இல்லை. திக்கு திசை கூட அறிய வழியில்லை. ஆதலால் அப் பலம் கூட அவனுக்கு கிடைக்கவில்லை. ஏதேனும் அறிவது பலம்தான் அல்லவா. ஒன்றுமே அறியாவிட்டால் ஆனந்தம் என்ற சொற்க்கள் மடத்தனமென்பது என் பகுத்தறிவு. உயிருள்ள ஒன்றுக்கு அந்நிலை அசாத்தியம். அந்நிலை இல்லாவற்றிற்க்குச் சம்ம். இல்லாத்ததைப் பற்றி பேசுவதோ பைத்தியக்காரத்தனம். உணர்வுகளுக்கு அறிவின் உதவி தேவையில்லை. மூளை குழம்பினாலும் பசிவலி அலட்டாமல் போய்விடாதே.

பொறுக்கமுடியாத வலியை இறக்கமுடியாமல் அவன் ஊன்றி ஊன்றி நடைபோட்டான். தூரத்தில் ஏதோ தெரிந்தது. அவன் தன் சோர்வடைந்த கண்களை கஷ்ட்டப்பட்டு விரித்துப் பார்த்தான். சாவைப் பார்த்திருந்தால் அவனுக்கு சந்தோஷம்தான் சிலுர்த்திருக்கும். ஆனால் மண்ணை தூக்கிவீசி விரைகிரதோ ராட்சஸச் சுழல்க் காற்று. முன் அதில் பட்டப் பெரும்பாடுகள் பளீரென யோசித்து நடுங்கினான். அக்காற்று சோதிக்கும் ஆனால் சாவு அளிக்காது. அந்த அசுரக் காற்று அவனை நோக்கிப் பாய்ந்தது.

பயத்திர்க்கும் ஒரு குருட்டு சக்தி உண்டு. இல்லையென்றால் அவனால் அசைந்திருக்கவே முடியாது. அவன் திரும்பி ஓடினான். மண் மலையை நாலுகால் மிருகம் போல் ஏற முயன்றான். காற்றின் உறுமல் அவன் காதை துளைத்தது. படபடத்து ஏற ஏற மண் சரிந்து அவனை தள்ளிக்கொண்டே இருந்தது. அவன் தன் இயலாமையை தெரிந்து அழுதான். முகத்தோடு தன்னை மண்ணில் சாய்த்துவிட்டான். அந்நொடியில் அவன் வருந்தியது வரப்போகும் ஆபத்தை நினைத்து அல்ல. சற்றுமுன் தூரத்தில் ஏதோ தென்பட்டதே அது ஒரு மனிதப் படையாகவோ, ஒட்டக கூட்டமாகவொ, ஏதேனும் உயிருள்ள ஒன்றாக தோன்றியிருக்கலாம். அப்படி நினைத்திருந்தால் அப் பொய்யிலும் ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கும். ஏன் அவ்வாறு எண்ணம் தவறவில்லை! ஞாபகத்தை எவ்வளவு சல்லடை போட்டும் அணு அளவுகூட சந்தோஷமோ அமைதியோ சிக்கவில்லை. அவன் உள்ளுருகித் தவித்தான். அது உடலுணர்வாக வெளிவரவில்லை.

காற்று அவனை ஓங்கி அடித்தது. கொடூரமான வலி தாங்கமுடியாமல் அவன் விரல்கள் சுருங்கி மண்ணைக் கவ்வின. காற்று சுட்ட மணல்மணிகள் குத்தி அவன் மெய் வெடித்தன. அது அவனை புற்றுநோய்க்காரனைப்போல் உறுமாற்றிவிட்டது. எல்லையற்று வலித்தபொழுதும் அவன் சுயநினைவிழக்கவில்லை. அவன் இந்த வலி அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

மணல்சுழல்க்காற்றின் ஆத்திரம் அடங்கின. புண்ணில் மண் கிள்ளி துன்புருத்தியது. அம்மா என்று மனதில் மெதுவாக கூப்பிட்டான். அன்னொடியில் அவனுக்கு ஆறுதல் கிடைத்தது. ஏன் இக்காலமெல்லாம் அவர்கள் தன் ஞாபகத்திற்க்கு வரவில்லை! மெதுவாக கண் திறந்தான். அவன் பார்வையில் மண்ணுக்குள் ஏதோ புதைந்து கிடந்தது. ஆவேசம் கொண்டு மண்ணை அகற்றி அதை வெளியிலெடுத்தான். நொங்கு! இந்த அசுரக் காற்று இதைத் தரவா விரட்டி வந்தது! வெறியுடன் அதன் தோலை பிய்த்து சர்வசக்தியோடு அதன் கண்களை நசுக்கியதும் நீர் குதித்தது.  பொறுமையற்று அவன் அத் தேன்னீரை குடித்தான். அது நாக்கில் பட்டதும் மெய் மறந்து போய்விட்டான். ஆனால் குடிக்கக் குடிக்க நீர் உள்ளே இறங்காமல் வாயை ரொப்புவதுபோல் தோன்றியது. அவனுக்கு மூச்சடைக்க ஆரம்பித்தது. தவித்தான். அவன் குடித்தது நொங்கல்ல, மண் புகுந்த மனித்த் தலைஓடு!
பாலைவனம் அதன் சூட்சியில் அவனை அகப்படுத்தி சிரித்தது. தொண்டை வரை சிக்கிய மண்ணை துப்புவதர்க்கு அவன் முயன்றான். மண்ணடைந்த வாயில் அவன் மூச்சுக்கு தவித்தான். திணறினான். மேகங்கள் பதுக்கிவைத்திருப்பது மின்னலில் தென்படுவதுபோல அவனுக்கு நினைவுகள் ஒளித்தது. அவன் செயல்களின் சரித்திரம் அவனை வளைத்துக் கொண்டது.

தாயை அவதூறு கூறியதெல்லாம் ஒலித்தது. தந்தையிடம் காட்டிய ஆத்திரம் அவனை எரித்தது. பிறருக்கு விதைத்த துன்பங்கள் எரிமலைபோல் வெடித்தது. அன்பும் பண்புமற்ற பாலைவனம்போல் தோன்றியது அவனுக்கு அவன் வாழ்க்கை. ஏன் இவ்வளவு இதயமற்றவனாக வாழ்ந்தேன் என்று அவன் கலங்கினான். அவன் சாகத் துடித்தான்.

அந்த மடையனுக்கு உன்மை விளங்காது. அவன் செத்து ஆயிரம் வருடங்களாகின. அவன் மனதின்த் தொடர்ச்சிதான் இந்த இயக்கம். இறப்பில் உடல் தானே செயலற்றதாகிறது. அவ்வுடலை ஆண்ட மனமும், அது கொண்ட குணமும் அழியும் என்று கருதுவது முன்னாட்க்களில் சூரியன்தான் பூமியை சுற்றுவது என்று எண்ணியபோல் தான். தூங்கும்பொழுது கனவு எப்படி செயல்படுகிறதோ, அப்போல் இறக்கும்ப் பொழுது அவ்வுயிரின் குணத்தின் ஆக்கத்தால் விடியாக் கனவு ஆரம்பமாகித் தொடர்கிறது, மறுபிறவி முளைக்கும்வரை. 

இறந்ததும் அவன் மனது உருவாக்கிய நரகத்தில்த்தான் இவ்வருடமெல்லாம் புழங்கியிருக்கிரான். மனதை அலச அறிதாய்க் கிடைக்கும் மனிதப் பிறவியை புனிதுறச் செய்ய தவறிவிட்டதை உணர்ந்தாண். அவன் அறியாமல் செய்த நர்ச்செயலின் வலுவினால் மன்னிப்பருள் யாசித்தான்.

அவன் சூரிய வெளிச்சத்தினும் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டான். எல்லா நினைவுகளும் அவனைவிட்டு விலகின. இவ்வேகத்தில் ஒன்றும் இல்லை.

அவன் ஒரு விந்தாய் உருவானான். அந்த விந்து ஒரு சுழலில் பயணித்தது . பலகோடி விந்துகள் சுற்றிலும் நீந்துவது அதுக்குத் தெரியவில்லை. அவ்விந்து ஒரு பசுவினுள் கர்ப்பம் கொண்டது. இயற்கையின் அடிமையாய் அக்கரு பெண்பால் உருவம்கொள்ளத் துவங்கியது. பிறகு ஒரு கன்றாய் அவள்ப் பிறந்தாள்.

விஜய்

Sunday 31 July 2016

ஞானம்

படித்தறிவது தகவல்
அனுபவத்தில்த் தெளிவது ஞானம்.

Friday 24 June 2016

நானாகிய...

நானாகும் முன் நான் யாரோ!
நான் என்றொன்றுண்டோ?
பாரென்பதினுள்ளில்
நானென்பது வேறோ?

உடல் மனம் ஒட்டி உருமாறும் விளைவை
நானென்பது சரியோ?
நிலையானது மதி அறியாதிடவே
உளதென்பது பிழையோ?

வாழ்வின் நுழைவாய் கடந்த விந்து
முதல் கொண்டது இன்பம் தானோ?
பேரின்பச் சுழலில் சறுக்கி வந்து
கருவாவது போராட்டம் தானோ?

நானாகிய ஜன்மம் ஜனித்து
ஜபித்த முதல்வரி யேதோ?
இந்த சிந்தனையாவதும் இல்லாவிட்டால்
வாழ்வின் சுவை அரிதோ!

என் எண்ணங்கள்த் துடர்ந்து முளைத்திட
விதையை புதைத்தது யாரோ?
அறிந்தவர் சொல்லிய ரகசியம் போல
ஆசை அவன் சிறு பெயரோ?

விழித்திருக்கும் பொருளின் திருவொளி
தூக்கத்தில்ப் பரவாததுயேனோ?
விழித்தறிகிறதெல்லாம் கூட
சிந்தனை சித்திரம்தானோ?

தொடரும்...