Monday, 23 May 2016

வெற்றி

தேவை இல்லை சற்றுமே, புகழ்
மனிதனையே வெட்டுமே.
கடமை எனது செய்யவே, பெருமை
ஊட்டச்சத்து மட்டுமே.

முடிவு காண வேண்டுமே, சோம்ப
லுதறிவிட்டால் சுகமே.
தடைகள் யாவும் பயமே, வீரம்
எப்பொழுதும் வசமே.

தவம் பெற்ற நிதியை, கோபம்
களவாடி விடுமே.
வாழ்க்கை அரிய பானை, அன்பை
நிரப்பிவிடு உடனே.

நடை போடு  தனியே, அறி
மெருகூட்டு வழியே.
துணை நிழல் தனதே, பொறுமை
பெரிய பாதுகாப்பே.

தவறுதல் அது இயல்பே, முயற்சி
செய்தல் துணிவே.
பழிசொல்லுக் கொரு மருந்தே, சிரிப்பது
சக்கரைபோல் இனிப்பே.

நேற்று இன்று இல்லை, நேரம்
நின்று போவதில்லை.
பெற்றிட மன விடுதலை, உயிர்
வற்றும்வரை ஓய்வில்லை.

தேவை இல்லை என்றுமே,  இன்பம்
முடிந்துவிட்டால் துன்பமே.
என்னை வென்ற வெற்றியின், பரிசு
எனக்கு என்றும் சொந்தமே.


விஜய்